Header Ads Widget

Responsive Advertisement

ஆண்கள்தினம்



புருவம் உயர்த்தாதீர்கள்
அர்த்த-நாரியில் முதல்வன்
அர்த்தன்-ஆண்மகன்
ஆண்டவன் படைப்பில்
ஆதாம் முதல் ஆண்மகன்
பௌருஷம் இலங்கிடவந்தவ
                                         ன்
தன்னுடையவர்களைத்
தாங்குவதில் நங்கூரம்
தன்சுகம் தொலைப்பதில்
              எரியும்கற்பூரம்
துணையெனொருத்தி
            வருகையிலவளை
தாங்கும்சந்தன மரம்
இழைய இழையத்தேய்ந்தும்
இல்லறம்மணக்கச்செய்பவன்
ஒத்ததுருவங்கள்
ஒன்றையொன்றுவிலக்கும்
எனும் அறிவியல்தெரிந்தும்
இணைக்கமுயலும்ஒட்டுதாள்
ஏற்றத்தாழ்வுகளும் தீர்க்கும்
துலாக்கோல் அவன்்்்்்
கன்னியான தமக்கைக்கு
கல்யாணம் வரை காவலன்
தங்கையின் துயர்துடைக்கு
கர்ம வீரன் அவன்
தாயின் தியாகங்களை தன்
தாரம்தாயாகும்வினாடியில்
தன்னுள் பதித்த தங்கமவன்
வாழவந்தவளின் பெருமைதனை
                                      எங்குமே
விட்டுக்கொடுக்காத கலங்கரை
விளக்கம் அவன்
காதலுக்கும் நட்புக்கும்
இடைப்பட்டதூரம்
கண்ணுக்குத்தெரியாத
வேலியென்றபோதும்
கண்ணியமாய் கடைசிவரை
காக்கும் உத்தமன் அவன்
மகனுக்கு கன்றுவயதில்
கதாநாயகனாய் இருந்தவன்
வாலிபவயதில் வழிமாறிப்போகாது
கண்காணிக்கையில்
கொடும்வில்லனாய்
தோல்விகளில் துவள்கையில்
தோள்கொடுக்கும் தோழனாய்
பாதிநேரத்தில் தன்னுடைய
பத்தினியின் தீர்வுகளுக்கு
பிரதிபலிப்பானாகி அதனால்
பிள்ளைகளின் பிணக்குக்கு
ஆளாகிஅழகாய்ச்சிரிப்பவன்
தனக்கென தனியாய் செலவில்லை
பிறர்த்துயர் தீர்ப்பதில் குறைவில்லை
உயிர்போகும் வேளையிலும்
உற்றவரின் நலம் வேண்டி
கண்வழியே உயிர்போக்கி
கண்ணீரில் பேசிடும்
உத்தமர்களுக்கு ஆண்கள்தினவாழ்த்துக்கள்

🌹வத்சலா🌹