Header Ads Widget

Responsive Advertisement

எப்படி பேசினாலும்

எப்படி பேசினாலும்

அன்பாய் பேசினால் அலப்புகிறா என்கிறார்கள்

பாசமாய் பேசினால் பசப்புகிறார் என்கிறார்கள்

பண்பாய் பேசினால் பாசாங்காய் பேசுகிறார் என்கிறார்கள்

கொஞ்சி கொஞ்சி பேசினால் வழிகிறார் என்கிறார்கள்

கோபமாய் பேசினால் திமிர் பிடித்தவர் என்கிறார்கள்

தவற்றை சுட்டிக்காட்டி பேசினால் குத்திக்காட்டி பேசுகிறார் என்கிறார்கள்

சட்டென்று பேசினால் முந்திரி கொட்டை என்கிறார்கள்

மெதுமெதுவாய் பேசினால் பொழுது விடிஞ்சிரும் என்கிறார்கள்

மனதில் உள்ளதை பேசினால் இரண்டுங்கெட்டான் என்கிறார்கள்

அதிகாரமாய் பேசினால் ஆணவக்காரர் என்கிறார்கள்

உண்மையை பேசினால் காக்கா பிடிக்கிறார் என்கிறார்கள்

கத்திப்பேசினால் காட்டுமிராண்டி என்கிறார்கள்

கல கலவென பேசினால் வாயாடி என்கிறார்கள்

எடுத்தெறிந்து பேசினால் எடுபட்டவன்( ள் )என்கிறார்கள்

ஊமையாய்பேசாமல் இருந்தால் உம்முணாமூஞ்சி என்கிறார்கள்

ஆசையாய் பேசினால் ஆளை மயக்குகிறார் என்கிறார்கள்

ஏதும் பேசாமல் இருந்தால் ஊமைகோட்டான் என்கிறார்கள்

எப்படித்தான் பேசவேண்டும் இவ்வுலகில்
வார்த்தையை அளந்து
தேவையானதை மட்டுமே பேசுவோம்


தி.பத்மாசினி