ஆணாதிக்கம் ஒழிக எனமுழக்கமிடும்
பெண்கூட
கண்நிறைந்த கணவன் வாய்க்கவேண்டும்!
காலமெல்லாம் அவன் விரும்பும் மனைவியாய் வாழவேண்டும் என்றுநினைக்கும்போதிலே ஆண் வெற்றிபெற்றவனாகி
விடுகிறான்!
பெண்ணில்லாவீடு
இருண்டவீடுதான்!
ஆணில்லா வீடோ
வெளிச்சமிருந்தும்
வெறுமையான வீடாகும்!
பூமொட்டினை மூடிப் பாதுகாக்கும் புல்லியிதழ் போல
குடும்பத்தின் பாதுகாவலன் ஆண்!
சாண்பிள்ளையென்றாலும்
ஆண்பிள்ளைதான்!
சூல்கொண்ட பெண்களின் வேண்டுலும் ஆண்பிள்ளைதான்!
கண்டு பூப்பூக்கும்!
காணாமல் காய்காய்க்கும் போல பிறப்பதற்குமுன் பெண்களின் கருவறையில்
ஈரைந்து மாதமிருப்பதைத் தெரிந்துவைத்துள்ள
யாவரும் அதற்குமுன்னாலே
தந்தையின் தேகத்துள் இருதிங்கள் இருந்தோமென்பதைத்
தெரியாமல் உள்ளனர்!
குடும்பமென்ற மரத்தின் வேராகத்
தாங்க ஆண்கள்
இருந்தால்தான்
அம்மரங்களெல்லாம்
பூப்பூக்கும்! காய்காய்க்கும்!
பெண்ணென்ற கண்ணுக்கு இமையாவான் ஆண்மகன்!
சுகமாய் சுமைகளைச் சுமக்கும் ஆண்மகன்
தன்னை நம்பிவரும்
பெண்ணைச் சுமக்கிறான்! அவள் ஈன்றெடுக்கும் தன்மக்களைச் சுமக்கிறான்!
தன்னை ஈன்றோரைப் போலவே தன்மனைவியை ஈன்றோரையும் சுமக்கிறான்!
வீட்டுக்கடனைச் சுமக்கிறான்!
தன்உடன்பிறந்தோரைச்
சுமக்கிறான்!
ஓங்கிய தென்னையின் கம்பீரமாய் அழகான
ஆண்மனதோ
அந்த தென்னையின் வேர்கள் மண்ணுக்குள் நடத்தும் நீர்ப்போராட்டம் போல ஓய்வின்றிஇருக்கும்!
தியாகம் செய்கிறோம் என்பதே தெரியாமல் தியாகம் செய்துவாழும் ஆண்களுக்கெல்லாம்
நல்வாழ்த்துகளைச் சொல்லி மகிழ்வோமே இந்த
சர்வதேச ஆண்கள் தினத்தில்!
💐💐💐💐💐💐💐💐💐தஹேமாவதி
கோளூர்