Header Ads Widget

Responsive Advertisement

பசலைநோய்



மழையில்குளித்து
உடல்சிலிர்த்திட
அடாத மழையில்
விடாத அழுக்கை
கழுவித்தள்ளியே
பளிங்கெனசிரித்
                         தன
பூச்செடிகள்......
           இருந்தும்
பளிச்சிட்டது ஒரு
உள்மறை சோகம்..
மழைமுகம் சலித்த
                       தால்
கதிர்முகம் நோக்
                     கிய
எதிர்ப்பார்ப்பின்
ஏக்கம் தான் அது!
அன்பும் சிலசமயம்
சலித்துதான் போ
                    குமோ?
எரித்திடும்வெயி
                    லில்...
மேனிதளவுற்றாலு
                           ம்....
எதிர்பார்த்தே காத்
                  ருக்கும்...
ஏக்கத்தின்வெளிப்
           பாடுதானோ
பச்சை செடியிலும்
பசலை படர்ந்து
இருக்கிறதே....!!!


🌹வத்சலா🌹