நீ,
தேனா திரவியமா? நான் தேடி வரும் ஓவியமா?
உன்னைப் பத்திரமாய் பார்த்திருப்பேன் ஒன்றும் எழுதாத காவியமாய்,,,,,
நிலவாய் நீ இருக்க, நினைவால் நானழைக்க கனவாய் போகுதடி
காலமும் கரையுதடி,,,,,
ஒரு வாய்
சிரித்து விடு
உலகை நான் ரசித்திருக்க - நல்ல முடிவாய் சொல்லிவிட்டு
வருவாய் வெண்ணிலவே,,,,
தருவாய் நீ
என ,
கன்னத்தில் முத்தமிட்டேன்,
கறுவாய் என
சொல்லி துடைத்ததும் ஏனடியோ?
திருவாய்
மொழி கேட்டு வந்தது
நானடியோ,,,,
மெதுவாய்
கண் சிவக்க நகர்ந்தது ஏனடியோ?
அருள்வாய்
என நினைத்து
வந்தேன்
உன்னிடமே, நீ
சமமாய்
நின்றதுமே
கண்டேன் சம்மதமே,,,,
பாலா