Header Ads Widget

Responsive Advertisement

நார்த் தேங்காய்



உயரமான இடத்தில்
பிறந்தேன்!
குரும்பையாய் முதலில் அரும்பினேன்!
உடல்பருத்து
இளநீராய் மாறி
அழகாய் குலைதள்ளினேன்!
முற்றியதும் நெற்றாகிக் கீழே வீழ்ந்தேன்!
நெற்று என்றபேர் பெற்றேன்!
நெற்றாம் என்னை எடுத்தோர் என்மேல்சட்டையை உரித்திட நார்த்தேங்காய் ஆனேன்!
எனக்குதான் எவ்வளவு மதிப்பு?
சீர்வரிசைகளில் நானும் ஒருதட்டாய் அங்கம்வகிப்பேன்!
திருமணவீட்டில் புதுத்தாலிக்கயிற்றை
என்னுடலைச் சுற்றிக் கட்டியபிறகே மணமகள் கழுத்தில்
மணமகன் கட்டுவார்!
கரடுமுரடாய் நார்கள் என்னைப் போர்த்தியிருந்தாலும்
என்னுள்ளம் தூயவெள்ளை!
மேலும் ஈரம்மிகுந்த மனம் எனக்கு!
கயல்கள் துள்ளாத
குளம் என்னுள் உண்டு!
நீர்க்குளம் வற்றினாலும் எண்ணெய்வயலாக
நான் மாறுவேன்!

த.ஹேமாவதி
கோளூர்