எதிர்க்காற்றை
எதிர்த்து செல்கிறது
பேரூந்து
அதையும்தாண்டி
வேகமெடுக்குது
கார்மேகப்பந்து
எந்தவினாடியிலும்
வானம்கிழிந்து
வேடுகட்டிய நீரெல்லாம்
வழிந்தேவிழலாம்
மழைபிடிக்கும் என
பொய்யுரைத்தவர்களைக்
காட்டிக்கொடுத்தன
கையில்பிடித்தகுடைகள்
குளியலுக்கு முன்
தலையில் நீர்த்தெளிப்பதுபோல்
மழைச்சிதறல்
முன்னோட்டம்பார்க்கிறது
சன்னல்கண்ணாடிகள்
மடமடவென இறங்கும்
முன்பே மழைத்துளிகள்
வேகமெடுத்து
சடசடத்து இறங்கின
தரையெல்லாம் நீர்
தெளிக்கப்பட்டும்
கோலம்போட ஆளின்றி
சிறுசிற்றோடைகளின்
நீர்க்கோலத்தில்
மிளிர்கின்றன சாலைகள்
புதுநிறம் உடுத்தின
பூச்சொரியும் பல மரங்கள்
நிறுத்தி வைத்திருந்த
மகிழ்வூந்துகளோ
செலவின்றி தங்களைச்
சிங்காரித்துக்கொண்டன
சாலையோரங்கள்
சேற்றைச் சந்தனமாய்
வீசிச்சென்ற வாகனங்களை
வாஞ்சையாய் வணங்கின
சாடிச்சென்ற
சாரலுக்கு மனதார நன்றி
சொல்ல என்மனகாற்றைத்
தூதுவிட்டு பயணத்தைத்
தொடர்ந்தேன் பயமகற்றி்்
🌹வத்சலா🌹