கள்ளமின்றிப் பழகும் உள்ளமழகு.
அள்ளிக் கொடுக்கின்ற செல்வமழகு.
கபடமின்றிச் சிரிக்கும் சிரிப்பழகு.
எதிர்பார்ப்பின்றிக் கொடுக்கும் கொடை அழகு.
உறுதுணையாய் இருக்கும் உறவழகு.
உரிமையோடு பழகும் நட்பழகு.
நல்லதைச் சொன்னால் சொல்லழகு.
நான்கு பேர் இரசித்தால் குரலழகு.
அளவோடு அசைந்தால் நீரழகு.
வளமாகத் தெரிந்தால் பயிரழகு.
தனிமையில் அழுகின்ற அழுகையழகு.
குழந்தையாய் மாறுகின்ற நிலையுமழகு.
அழகுக்கு அழகு சேர்க்கும் தமிழழகு.
எந்நாளும் எப்போதும்
தமிழழகு.
*சுலீ அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*