மற்றவர்கண்ணோட்டத்தில்
நான் யார்்்்்்?
இந்த எண்ணமே
தவறில்லையோ?
இதற்குமதிப்பளித்தால்
மனத்தளவில் உன்னை
நீயே தாழ்த்திக்கொள்வாய்்்்
முற்றுப்பெறாத செயல்கள்
முடுக்கப்படும்்்்்
மனதுக்குள் புழுக்கம்
அதிகரிக்கும்்்்்உன்
முயற்சிகள் எல்லாம்
முளையிலேயே
பிடுங்கப்படும்்்்்
மற்றவர்கண்ணோட்டத்தில்
நீ. என்னும் பயமே ்்்
உன் திறமைகளை
தகுதிநீக்கம் செய்துவிடும்!
எப்போதும் இருட்டில்
உன்னை சிறைவைக்கும்!
வெளியே வா....
தடைதகர்த்து எழுந்துவா !
எதிர்மறை எண்ணங்களை
எரித்துவிட்டு வா!!!!!
தாழ்வுமனப்பான்மையை
தகர்த்தெரிந்து வா ்்்்்
பயத்தைஉருக்கிவிட்டு
பகலவனாய் வா்்்்்
தயக்கத்தை தூக்கி தூரப்ப
போடு்்்்்
ஒப்பிடுதலை ஒதுக்கிப்போடு
பயணம்வெற்றியைநோக்கியா்்்்்
ஆம்எனில்பிறர் கருத்தும்
அதிருப்தியும் எதிர்ப்பும்
அடுத்தடுத்த திருத்தங்கள்
என்பதை நினைவில் வை்்
பிறர்நிலைக்கு பொறாமை நீக்கு்்்்
உன்நிலைமையை ஏற்றுக்கொள்்்்
தீர்வை நீயே கண்டிடு ஏனெனில்
பூமிசுழன்று இரவுபகலை
புரட்டிப்போடுதல் போல
உன்னைப்பற்றிய அடுத்தவர்
கண்ணோட்டமும் புரண்டேபோகும்ம்்்்
இதையறிவதிலேயே மொத்த வாழ்க்கையும் போகுமெனில்
உன்வாழ்க்கையை வாழ்வது
எப்போது்
தூக்கியெறி துக்கம் தரும்
நினைப்புகளை்்்
நிழல் உதிர்த்த நிஜமாய் நில்
சிகரங்களும் உன்காலடியில்
🌹வத்சலா🌹