தீபாவளி
பட்டாசுக்கு மட்டுமல்ல அதிரசத்துக்கும் பேர்போனது!
இல்லத்தரசிகள் அனைவருக்கும் அதிரசத்திற்கு பாகு
செய்யத்தெரியாது!
தெரிந்தவர்களுக்கோ
தீபாவளிக் காலத்தில் வீட்டுக்குவீடு வரவேற்பு!
பாகெடுத்து முடிந்ததும் வட்டவட்டமாய்
தட்டிதட்டி கொதிக்கும் எண்ணெயில் போட்டு சிவக்க எடுத்து எண்ணெய் பிழிந்து தாம்பாளத்தில் அடுக்கி பார்க்கவே பரவசமாய் இருக்கும்.
இதிலே வெல்ல அதிரசம்
சர்க்கரை அதிரசம்
என இருவகை உண்டு!
சுட்ட அதிரசங்கள்
நெருக்கத்தைப் பொறுத்து
எண்ணிக்கை கூடியோ குறைந்தோ தெரிந்தவர் தெரியாதவர் வீடுகளுக்குத் தரப்படும்!
தலைதீபாவளி என்றால் அதிரசங்களின் எண்ணிக்கை எகிறிவிடும்!
அதிரசம் தின்னுங்களத்தான்
என்று அவள் கொஞ்ச
அதிரசமே தன்னைத் தின்னும்படி சொல்கிறதே என்று அவனோ
சுட்ட அதிரசத்தைப் பாராது பேசும் அதிரசமாம் அவளையே அதிசயித்துப் பார்ப்பான்!
தீபாவளி முடிந்து பலநாள்கள் ஆனாலும் தேன்பாகாய் இனித்துச் சுவைக்கும் அதிரசங்களைப் பிடிக்காதோர் என யாருமில்லை இவ்வுலகில்!
த.ஹேமாவதி
கோளூர்