நங்கையின் முகம்
மனதின் நிறம்
நீல வானத்தில்
தவழ்கின்ற
சுட்டி குழந்தை
இரவு வேளையில்
ரம்மியமான சூழலில்
குளிர்ந்த காற்றில்
முழு நிலவு
நம்பிக்கை யின்
அடையாளம்
வாழ்க்கையின் தத்துவம்
ஏற்றமும் இறக்கமும்
நிலவு போல
வாழ கற்று கொள்.
அம்பை சங்கரி