பழையநினைவுகள் என்பது.....
பலருக்கும் பாகற்காய் என நினக்கும்தோரும்
கசப்பைமட்டுமே
தந்துவிடுகிறது!!!!
சிலருக்கோ.....
பெருநெல்லியாய்
கடிபட கசப்பும்,
மென்றிடப்புளிப்பும்,
விழுங்கிய பின்
இனிப்பும்,
கொடுப்பதுண்டு!!!
மிகச்சிலருக்கே
என்றும்பலாவென இனிக்கும் நிகழ்வாகவே இருப்பதுண்டு!!!!
இறந்த காலம்
என்பதால், நினைவுகளை சமாதியில்வைக்க முடியுமோ???
எதிர்காலமோ
அனுமானிக்க
இயலாவினாத்தாள்!!!!!
எனவே ஆயத்தம்
என்பதோ..... கேள்விக்குறிதான்
நிகழ்காலத்தின்
நினைவுகளென்பதோ.......
செதுக்கக்கொடுக்கப்பட்ட
சிற்றுளி......
இதைக்கொண்டு
நீ
வடிவம் தரப்போவது.......
தெய்வத்துக்கா???
தேவையற்றதுக்கா???
தெய்வம் எனில்.....
முக்காலமும் உன
க்கு
முற்றிலும் அடிமை!!!!!
தேவையற்றது எனில் மனமே..... உனக்கு நீயே
எக்காலத்தும்
அடிமை.....!!!
🌹வத்சலா🌹