தொடுக்கப் பட்ட
மலர்களுக்கு
நூலே சிறைக்கூடம்!
தடுக்கப் பட்ட
நீருக்கு
அணைக்கட்டே
சிறைக்கூடம்!
நம்மால் சொல்லப்பட்ட கடுஞ்சொற்களுக்கு
கேட்பவர் மனமே
சிறைக்கூடம்!
ஏனெனில்
தீங்கான சொல்கேட்டவர்
மனதில் எப்போதும்
மறக்கமுடியாத
அளவு அக்கடுஞ்சொற்கள்
நிலைபெற்றுத் தங்கிவிடும்!
த.ஹேமாவதி
கோளூர்