"க"ல்லறையில் நீ உறங்கினாலும்
"கா"வியம்படைத்த உமது
வரிகளே!
"கி"ண்ணத்தில் ஊறிய மதுரமாய்
"கீ"ற்றொளியாய் கீதம் பாடுமே
அன்றும் இன்றும் என்றுமே!
"கு"றுநகையை வர்ணிப்பதிலிருந்து
"கூ"டிக்கலைந்திடும் கூட்டம்வரை
உமது படைப்பாற்றல்
ஆகா!
"கெ"டுதலையும்
"கே"ட்காமலே கொடுப்போரின்
நிலையையும்
"கை"வண்ணத்தில்
கொட்டும் மழைத்துளியாய்
"கோ"டிட்டுக்காட்டிய புரட்சி நாயகனே நீ!
"கௌ"தமரின் பற்றற்ற
ஆசையில்லா வாழ்வையும்
படம்பிடித்துக்காட்டிய பண்பாளரே!
மதுவையும் மாதுவையும்
பேதைமைத்தனத்தையும்
போதைத்தனத்தையும்
காதலையும் மோதலையும்
கவிச்சாறில் ஊறவைத்துத் தந்த
காவியமே!
உன்புகழ் என்றும் அழியாது!
எழுத்துகள் இதயத்தில் இதமாகி
ஏக்கமும்தூக்கமும் பதமாகி
எப்போதுமே தாக்கத்தை உருவாக்கும்
உமது வரிகள்
இதயத்திலிருந்து உதயமே!
பஞ்சமில்லா வரிகளை
நெஞ்சத்தில் சுமக்கிறேன்!
வஞ்சமில்லா வார்த்தைகளை
கஞ்சமில்லாது சுவைக்கிறேன்!
இவண்
ம.பிரான்சிஸ் ஆரோக்கியம்.