உன் மனதை நான் கொத்த
என் மனதை நீ கொத்த
மரங்கொத்திப் பறவைகளாய் ஆனோம் நாமே!
கொத்திய என்மனதை நீயெடுத்துக் கொண்டாய்!
உன்மனதைக் கொத்தியெடுத்துக் கொண்டேன் நானும்!
மனங்களின் இடப்பெயர்வால் நீ இங்கே நான் அங்கே!
சங்கமம்தானெங்கே?
மதத்தாலும் மொழியாலும் பெற்றோரால் பிரிக்கப் பட்டோம்!
மாறிய மனங்கள் அவரவரிடத்தே வந்துசேராதது அவர்கள் அறியாதது!
மெல்லமெல்ல காத்திருப்போம்!
மாற்றம் வரும்!
காத்திருத்தல் சுமையானதென்றாலும்
ஏற்றதொரு நாளிலே நல்லபதில் வரும்!
காத்திருக்கும் வேளையிலே என்நினைவெல்லாம்
உன்மனதைக் கொத்தும் மரங்கொத்தியாய்!
உன்நினைவெல்லாம்
என்மனதைக் கொத்தும் மரங்கொத்தியாய்!
த.ஹேமாவதி
கோளூர்