என்னை
தண்ணீருக்குள்
தள்ளி விடுங்கள்
என் கண்ணீரை
எவரும்
கண்டு விடாதிருக்கட்டும்
என்னை
பேரிரைச்சலுக்குள்
இழுத்து போடுங்கள்
என் காதலனுக்காக
துடிக்கும்
என் இதயத்தின் ஓசை
எங்கும் பரவாமல்
போகட்டும்
என்னை
இந்திய
துணைக் கண்டத்தை
எக்காரணம் கொண்டும்
தாண்ட விடாதீர்
என் வறுமைக்கு
காரணம் விதி
என்பதாகவே இருக்கட்டும் ..!