Header Ads Widget

Responsive Advertisement

ஒரு கோழியின் டைரி



வீட்டுக்கு விருந்தாளி
வந்தாலே……!
பகீரென்கிறது மனசு…
அய்யோ……!
கூரை மீதிருந்த……
காகம் கரைகிறதே…!

இதயத்துடிப்பு
இன்னும் அதிகரிக்கிறது..!

நிச்சயம் இன்றைக்கு
விருந்தாளி
யாராவது வருவாங்க….!

என் சுற்றத்தை
சுற்றும் முற்றும்
வாஞ்சையுடன் பார்க்கிறேன்…!

ஆபத்து நெருங்குகிறது…!
இன்று-
யாரோ ஒருவர் காலி
நிச்சயமாகத் தெரிந்து விட்டது..!

விருந்தாளி வந்தே விட்டார்…!
வீட்டில் ஏற்பட்ட
களேபரத்தின் மூலம்
தெரிந்து கொண்டேன்…!

மதியம் வரை…
நான் எதிர்பார்த்தபடி
எதுவும் நடக்கவில்லை…!

விருந்தாளி விடை பெறும் போது
ஓரக்கண்ணால் அவரைப் பார்த்தேன் !

அவர்-
அய்யப்பன் கோவிலுக்கு
மாலை அணிந்திருந்தார்….!

நிம்மதிப் பெருமூச்சு விட்டபடியே
இரையைத் தேடலானேன்..!*

*இன்னும் உயிர் வாழ…….!*