Header Ads Widget

Responsive Advertisement

கொடுத்துவைத்தவர்கள்



கள்ளம் இல்லா
பிள்ளை அன்பைப்
பெறக் கொடுத்து
வைத்தவர்கள்..நாம் .  ஆசிரியர்கள்....

குழந்தை ஒன்றோடு
கொஞ்சும் போது
குழந்தையாகிப்
போகிறோம் நாம் ..பெரியவர்கள்

வளர்ந்தாலும்
வயது கடந்தாலும்
சுற்றிலும் பிள்ளைகள்
சுறுசுறுப்பாய் நாம்.. ஆசிரியர்கள்

குற்றங்களை
மறந்து விடும்
தெய்வங்களின்
அருகிலேயே நாம்...ஆசிரியர்கள் ...

எப்போதும்
அறிவு வளர்க்க ..
கொடுத்துச்சிறக்க ..
முடிந்தவர்கள் நாம் ஆசிரியர்கள் ...

கண்ட குறை
திருத்திச் சரிப்படுத்த
அதிகாரம் மிகப்
பெற்றவர்கள் நாம் ஆசிரியர்கள்...

பெற்றோருக்கும்
பெற்றோராய்
உற்றவர்க்கும் மேலதிக
உரிமை பெற்றவர்கள் நாம் ஆசிரியர்கள்..

இளமை என்றும்
மாறாமல்  சுற்றும்
இளமைத் துள்ளலோடு
முதுமையிலும்  நாம் ஆசிரியர்கள் ....

எத்தனைக்கவலைகள்
இருந்தாலும்
சேட்டைகள் கண்டு
இளகிவிடும் நாம் ...ஆசிரியர்கள் ..

தினம் தினம்
சிரிக்க வழியுண்டு ...
புதுப்புது செய்திகள்
பல உண்டு ...
எத்தனைச் சிரமங்கள்
இருந்தாலும் ...
ஆசிரியப் பணிக்குச்
சிறப்புண்டு ....
ஆத்ம திருப்தி அதில் உண்டு .....
ஆசிரியருக்குத் தனியிடமுண்டு ...
ஆம்... ஆசிரியர்க்கு உலகில்
தனி இடம் உண்டு .....

         தெய்வானை.