அன்புள்ள காதலிக்கு ஆசையில் ஓர் கடிதம்
எழுதவும் முடியவில்லை
அது,
ஏனோ தெரியவில்லை,,,
புரிவது இருப்பதனால் பிரிவேதும் இல்லை
யென்றாய்,,,
காலம்,
சரிவது தெரியாமல்
பரிவுடன் நானிருந்தேன்,,,,
தெரிவது வானவில்லாய்! அந்த
தென்றல் வரும் வரை,,,
கண்டதும் மறைவதேன்!
நீ,
தென்றலின் காதலியா?
உள்ளதை நீ சொல்லு மண்ணில்
உன்னைப்போல் காத்திருக்காள்,வண்ணங்கள் ஏழும்
பெற்றவளாம்
சொல்ல வாயில்லாமல் அழுகின்றாள்,,,
மையிட்ட கண்களால் தையல்
என்னை தைக்கையிலே,,,
தென்றல் வர
நீ மறைய ,
பொய்யென
நான் கண்டேன் புரியாமல் பூமியிலே!
விண்ணில்,
ஏழு வண்ணம்
நீ பெறவே இவளென நானறிந்தேன்,,, ஊருசனம் தெரிந்து கொள்ள
மண்ணின், வானவில்லை ( தையல்)
நான் மணந்தேன்!
நான்,
கார்மேகமாய் வரும் போதெல்லாம் மண்ணில் வரவிடாமல் வானவில்யாய் வந்து தடுப்பதேன்?
பாசத்தினாலோ?
இல்லை தையல் மேலுள்ள கோபத்தினாலோ?
விளக்கம் சொல்ல
நீ வருவாயென,,,
காத்திருக்கேன்
தென்றலின் காதலியே!
இப்படிக்கு,,,
பாலா,,,