Header Ads Widget

Responsive Advertisement

வானம் வசப்படும்

*

உண்ணாது, உறங்காது, குடிக்காது, படுக்காது  படித்தல் மட்டும் எந்நாளும் போதாது.
அயராது, தளராது கலங்காது, மயங்காது  உழைத்தல் அதுவே நொடியும் வேண்டும்.

நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் இருந்தால் மட்டும் என்றும் அது போதாது.
உயர்ந்த உள்ளமும் சிறந்த எண்ணமும் இருத்தல் எந்நாளும் எப்போதும் வேண்டும்.

அலங்காரம், ஆவேசம், ஆர்ப்பாட்டம், கூப்பாடு நிறைந்த பேச்சு இருந்தாலும் போதாது.
தேவைக்குப் பாய்ந்து வந்து
தேடிவந்தால் உடன் நின்று
ஓடி ஆடிச் செய்கின்ற செயலது வேண்டும்.

நல்லதை நினைத்து, நல்லதைச் செய்து,
நல்லோர் சொல் கேட்டு
நல்லோராய் வாழ்ந்தால்
வையகம் என்ன! வானம் என்ன!
விண்வெளி கூட உந்தன் வசப்படும்.
சூரியமண்டலம் பணிந்து நகர்ந்திடும்.

*சுலீ. அனில் குமார்*