இரவெல்லாம் கண்விழித்து... இதமான தென்றல் வீசி... பால் போன்ற ஒளியை பொழிந்து ...பக்குவமாய் பிழை ஏதும் ..அண்டாது
சுற்றிச் சுற்றியே வந்து ..
காத்தாள்....... நிலவு... அன்னை!
🌝
அன்னையின் அணைப்பினில் கண்ணயர்ந்து... ஆயிரம் சேட்டைகள் புரிந்து...
தன்னைத்தான் சுற்றிக்கொண்டு ...
குறும்பாய் உறங்கிடும் ... பூமி ....குழந்தை...!
🌏
அதிகாலையில் புத்தொளி வீசி... அதிசீக்கிரம் எழு... என எழுப்பி ...பூக்களை புது மணங்களைத் தந்து ..புதுச் செயல் தினம் செய்திடச் செய்து சுறுசுறுவென தன்னைச் சுற்றவும் செய்தான்..... சூரியன் தந்தை ...
🌞
மூவரும் நேரெதிர் நிற்க விதம்விதமாய்க்... கிரணங்கள் தோன்றும் ..பின் அமைதிக் காய் சற்றே விலகியும் செல்லும் ...
யுகம் யுகம் யுகமாய் ..இப்படி நடப்பது எல்லாம் அண்டை வீடுகள் அறியும்...
ஒன்பது கோள்கள் ...
இரவும் பகலும் வந்தாலும்.. மழையும் புயலும் வந்தாலும் ..
என்றாலும் என்றென்றும் வாழும் இது எங்கள் சூரிய குடும்பம் ....☀
தெய்வானை .
மீஞ்சூர் .
🌏🌏🌏🌏🌏🌏🌏🌏