மனிதன்
உயிரோடு
வாழ்வதற்கு
காற்றுதேவை..
காற்றை
சேமிக்க
மரங்கள்
தேவை..
மழையைச்
சேமிக்க
கார்மேகங்கள்
தேவை..
மழைநீரை
சேமிக்க
மனிதன்
தேவை..
நீரின்றி
அமையாது உலகு..
நீரோடு உறவாடு
நீரை உருவாக்கு
நீரே இறைவா
நீரே நிறைய
வா..
நீயின்றி
எதுவுமில்லை
நீரின்றி
எதுவும்
எழுவதுமில்லை..
இவ்வுலகில்
நீரே
முதல்வன்..
நீரை சேமிப்போம்
மனிதர்களைக்
காப்போம்..!
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..