Header Ads Widget

Responsive Advertisement

முள்



முள்ளிலே கால் வைத்து முடிந்தவரை மிதித்து விட்டு காலிலே முள் குத்தியது என்பார்
பழியை முள்மீது போட்டே திரிவார்.

சொல்லிலே முள் வைத்து
பொல்லாததைச் சொல்லிவைத்து
முள்ளாகக் குத்தியது என்பார்
அந்தப் பழியையும் முள்மீதே வைப்பார்.

பாதுகாப்பாய் முள் கொண்ட மலர் பறிக்க முயன்றுவிட்டு
முள் செய்யும் கடமையை வெறுப்பார்
தவறு முள் மீது என்றே பழிப்பார்.

ஒதுங்கியே இருந்தாலும்
அமைதியாய்க் கடந்தாலும்
கடமையைச் செய்தாலும் பழிப்பார்
பழிப்பவர் இழித்துப் பேசியே மகிழ்வர்.

வள் ளென்று விழுந்தாலும்
பிடுங்கியே எறிந்தாலும்
கவலையே கொள்ளாமல் தொடர்வார்
நல்லோர்
முள்ளாகக் கடமையைச் செய்வார்.

*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*