அன்பென்றால்
இருவிழிகளின் கலப்பல்ல!
இருஇதயங்களின்
பிணைப்பு!
அன்பென்றால்
எதிர்பார்ப்பல்ல!
எதையும் எதிர்பார்க்காமல்
இருவரிடையே
உண்டாவது!
அன்பென்றால்
பேதங்கள் கொண்டதல்ல!
பகைமீதும்
வித்தியாசமின்றி
செலுத்துவதாகும்!
அன்பென்றால்
கண்ணில் தெரியும்
உருவமல்ல!
நெஞ்சங்கள் உணரும் அழகிய அருவம்!
அன்பென்றால்
அடக்குமுறையல்ல!
மறுப்பே இன்றி
அடங்கிப் போதலாகும்!
அன்பென்றால்
காதல்மட்டுமல்ல!
பிறரின் நன்மைக்காக
காதலையே துச்சமெனக் கருதி
தியாகம் செய்வதுமாகும்!
அன்பென்றால்
அலங்கார வார்த்தைகளல்ல!
அடக்கமான
புரிதல் உணர்வாகும்!
அன்பென்றால்
இறைவன் மட்டுமல்ல!
அந்த இறைவனால்
படைக்கப் பட்ட
தாயுள்ளங்களும்தான்!
தாய்மையை விஞ்சி
அன்பைப் பொழிவதில் யாருளரிங்கு?
ஆகவே
அன்பென்றால்
தாய்மை!
இதை ஏற்பதே வாய்மை!
த.ஹேமாவதி
கோளூர்