Header Ads Widget

Responsive Advertisement

பொடிக்கவிதைகள்

*காற்றின் தெற்கு*

அவள் எந்த திசையில் இருந்தாலும் காற்றுக்கு அதுதான் தெற்கு திசை!
ஏனெனில் அவள்மீது
மோதும்போதெல்லாம்
காற்று தென்றலாய்
மாறுவதால்!
தென்றல் தெற்கிலன்றோ பிறக்கும்!




*தத்துப் பிள்ளை*

என்னில்
வெறும் இலைகள் மட்டுமே!
பூவுமில்லை! காயுமில்லை!
எனக்குமட்டும்
தாய்மைப்பேறு மறுக்கப் பட்டதோ?
என்று வெற்றிலைக் கொடிகள் வாதிட்டன இறைவனிடம்!
பதிலுக்கு இறைவன் ஓங்கிவளர்ந்த பாக்குமரங்களைச் சுட்டிக்காட்டி கலங்காதே அவை ஈனும் பாக்குகளெல்லாம்
உங்களுக்கே தத்துப்பிள்ளைகளாக
உங்கள்மடி மீது வந்து அமரும் என்றான்.





*மருதானியின் பகைவன்*

அன்பே
என்றிலிருந்து நாம் காதலில் வீழ்ந்தோமோ அன்றிலிருந்தே நான் மருதாணியின் பகைவனாகி விட்டேன்!
காரணம் என்னைக் கண்டதும் நாணத்தால் உன்முகம் சிவக்குமே அந்த செம்மை அவைதரும் செம்மையை விஞ்சி இருக்கிறதாம்!

*த.ஹேமாவதி
*கோளூர்*