கூன் விழுந்த
கிழவிகல்லாம்
ஒன்னா சேந்து
குத்த வச்சுட்டா
பேத்தின்னி
கூவுறத நிறுத்துனாக்க
குத்தமொன்னும்
ஆயிறாது
குழந்தை
குமரி ஆகாம
போயிறாது
வான் அளாவி
வார பொண்ண
தேன் பாலுன்னு
புகழ்ந்து தள்ளி
திறமை வராம
பாத்துக்குது இந்த
திக்கு தெரியா
மக்கு கூட்டம்
அதிக படிப்பு
படிச்சு புட்டா
அதுக்கேத்த
இ்டமெங்க தேட
அறிவு சிறக
ஒடிச்சுப்புட்டா
துக்கமில்லைனு
திரிஞ்சது இன்னும்
திரியுது ஒரு கூட்டம்
சாதி பெரும
நோயுறுமே
நாதியத்து
போயிருமேனு
செத்த பொணமெல்லாம்
சேந்து
பெத்த
பொண்ண
கொல்லுதய்யா
அதையும்
நாலு கழுதைக
நல்லதுன்னு
சொல்லுதய்யா
வெக்கமே
இல்லாம
இன்னிக்கு மட்டும்
வாழ்த்துச் சொல்லி
விடிஞ்சதும் கதையில
சித்தப்ப யாருன்னு
கேட்கும்
கேடு கெட்ட இந்த
ஊரோட
நாக்கும் ...