கண்முன்னே நில்லாமல் காதல் வலை வீசுவோர்கள்
கண்ணே மணியே என்று
கனிந்துருகி நிற்பார்கள்.
கதைகள் பல சொல்லிக்
கவர்ந்திட முயல்பவர்கள்
கருணையே இல்லாமல் கலங்கவும் வைப்பார்கள்.
கதறி அழுதாலும் பதறி நின்றாலும்
கந்தலாய் உனைக் கசக்கி எறிவார்கள்.
காதலுக்குப் பிறக்காமல்
காமத்துக்குப் பிறந்தவர்கள்
காதலராய் இருக்காமல்
காமுகராய் இருப்பார்கள்.
ஆண் மட்டும் ஆபத்து என்று மட்டும் நினைக்காதே
ஒரு பெண் அன்றோ கயவனுக்கு அடைக்கலம் அளித்து நின்றாள்
ஒரு பெண் அன்றோ அவர்களுக்கு பெண்களையே அனுப்பி நின்றாள்
ஒரு பெண் அன்றோ காமநாய்க்காய் நீதிமன்றம் செல்கின்றாள்.
உன்னையே நீ அறிவாய்
உன் எல்லையை நீ உணர்வாய்
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்
அதீத சுதந்திரம் ஆபத்து என்றுணர்வாய்
பெற்றோரிடம் மறைத்து வாழ்தல் பேராபத்து என்றுணர்வாய்
சொல்லாமலே சொல்லிநின்ற பாடங்கள் இதுவன்றோ
சொல்லப்படவேண்டுமென்ற பாடங்கள் இதுவன்றோ
இதை உணர்தல் அனைவருக்கும் நலமன்றி வேறுண்டோ?
*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*
