பாட்டியும் இல்லை,
பூட்டியும் இல்லை
சுட்டது வடையும் இல்லையடா
பாலன்,
நிலவின்
கருவில்
வளர்ந்த பிள்ளையடா,,,
ஏறிட்டுப் பாரு எல்லாம் தெரியும்
உன் மகன் அது போல் இருந்திருப்பான்,,,,
அவன்,
இருப்பிடம் கண்டு மகிழ்ந்திருப்பான்,,,
அசைந்திடும்
உதடு
அசைந்திடும் வேளை,
அதையும்
சொல்ல மறந்துவிட்டான்,
அவன் உலக வாழ்க்கையில் திளைத்து
விட்டான்,,,
குழந்தைக்கு நினைப்பு இருக்கின்ற
போது
சொல்லத் தெரியவில்லை,,,,
சொல்லிடும் வேளை வந்தபோது,
கண்ட கருவறை
நினைப்பும் இல்லை,,,
இறைவன் கொடுத்த மறதியில்
இது தான்
மானுடம்
பெற்ற
முதல் மறதி,,,
இதுவரை
கவிஞன் கூறவில்லை,,,
நிலவின் கருவினில் யாருமில்லை,,,
நீயும்,
நானும்
கருவினில்
இருந்ததை
இன்றும்,
எடுத்து சொல்கிறாள்
நிலவு,
என்றும் இளமையில் இருக்கின்றாள்,,,
கீழும்,
மேலும் சாய்ந்தாலும் கண்ணிமை
போல்
காக்கின்றாள்
கடமையில் அவளும்
தாயாக,,,,
அன்னை,
பாலும்,
சோறும் ஊட்டயிலே அவளும் பாதி தெரிந்தவளாய்,,, நினைவில் அவளும் மறந்தவளாய்,,,
மயக்கும்,
வெண்ணிலவாய்
என் நிலா!
பாலா