ஒன்றுபட்டு வாழ்ந்து வந்தோம் குழந்தைகள் போல,
ரெண்டு பட்டு போக நாங்கள் இருந்த
தில்லையே,,,,
கன்றுக்குட்டி போல நாங்கள் துள்ளி ஓடியே,
பள்ளிக்கூடம் சென்று வர சலைத்ததில்லையே,,,,
தனித்தனியா வீடுகளில் சமைத்திருந்தாலும் நாங்கள் சமத்துவமாய் ஒன்றுபட்டு உண்டு வந்தோமே,,,,
தெருவிளக்கில் ஆணும் பெண்ணும்
படித்து வந்தாலும், அதில் வேற்றுமையும் இன்று வரை தெரிந்த
தில்லையே,,,
ஆண்டுகளும் தொடர்ந்து வர வளர்ந்து வந்தோமே,,,
அதில் ஆசையான பருவத்தையும்
கடந்து
வந்தோமே,,,
வீடு வரை போய் வருவோம் எதுவும் தெரியல,,,,
வெளுத்த
தெல்லாம் பால் என்போம்
மறக்க முடியல,,,
இந்த நாளில்
அந்த நாளை
மனம் , நினைத்து
விட்டது,,,..,
அது,
எந்தன் வானில், புன்னகைப் புறாக்களையும் பறக்க விட்டது,,,
என்று காண்பேன் என்று மனம் அமைதியானது,,,
இடையிடேயே நினைக்கும் போது
இதயம் ,
நின்று பறக்குதே,,,,!
பாலா