Header Ads Widget

Responsive Advertisement

நிழல்


நிழல் கூட நிஜமாகிறது

வண்ண நகலெடுக்கும் போது


நிழலும் முன்னால் செல்லும்

ஒளி பின்னால் வந்தால்


நிழலுக்கும் கூட உருவமுண்டு

பொருள் நிலையாக இருக்கும் வரை


நிழலின் நிறம் கருப்பு

யாருக்கும் வராது அதன் மீது வெறுப்பு


நிழல் இல்லையென்றால் சிலசமயம்

நிஜம் கூட பொய்யாகும்


நிழலை நிறுத்தவும் முடியாது

கையால் பிடிக்கவும் முடியாது

பெட்டியில் அடைக்கவும் முடியாது

கட்டி அணைக்கவும் முடியாது

அடித்தாலும் அவனுக்கு வலிக்காது

கிள்ளி முத்தமிட்டாலும் தெரியாது


கருப்பாய் வந்து பயமுறுத்துவான்

காட்டிக் கொடுக்கவும் செய்வான்

தப்பிக்கவும் வழி செய்வான்


அவன் உயிர் பெற்றிருப்பதே

நம் மால் தானே


தி.பத்மாசினி