Header Ads Widget

Responsive Advertisement

அன்பான உறவுகள்



தாயின் அன்பைக் காட்டிலும் அன்பான உறவொன்றுண்டோ

தகப்பனின் தன்னிகரில்லா அன்புக்கு ஈடுண்டோ


கட்டியணைத்து காக்கும் அக்காவின் உறவில் குறையுண்டோ


ஆசையுடன் கைப்பிடித்து அழைத்துச் சென்று வெளி உலகைக்காட்டும் அண்ணணின் அன்பான உறவும் பாசமும் அள்ள அள்ளக் குறையாதது

தம்பியின் தரமான பாசத்தில் தப்பேதும் உண்டோ

அடிக்கடி சிறுசிறு சிணுங்கலோடும் அன்பான  சண்டையோடும் தங்கையின் பாசத்தில் கலங்கல் உண்டோ

ஆயிரமாயிரம் அன்பான உறவுகள் இருந்தாலும் பெண்ணுக்கு சிறந்த உறவு  பதியின் உறவும்
ஆணுக்கு தம்  பாரியான் உறவும் சிறந்தது


பல்லோருக்கும் சிறந்த அன்பான உறவு
வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளே

அனாதை குழந்தைகளுக்கு அன்னமிட்டோரே அன்பான உறவு

ஆதரவற்றவர்களுக்கு ஆடை கொடுப்போரும்
அன்னம் கொடுப்போரும் அன்பான உறவுகளே

அன்பான உறவுகளை விலை கொடுத்து வாங்க முடியாது
சிறிய புன்னகையும்
இனிய சொல்லும்
உதவும் கரங்களும்


தி.பத்மாசினி