Header Ads Widget

Responsive Advertisement

ஆற்றவியலா மனம்

பஞ்சாரத்தைத்
தேடியலைகின்றன
சிங்கங்கள்

மொட்டை மாடிகளிலேயே
முடங்குகின்றன
ஆலமரங்கள்

பொசுங்கிப்போன
கனவுகளைக்
கட்டுத்தறி மாடுகளாய்

அசை போடுகின்றன
ஆற்றவியலா
மனம்

*பொன்.இரவீந்திரன்