ஊர்ப்பயணம் போகையிலே
மாலை மயங்கும் நேரத்திலே
மையிருட்டு வேளையிலே
ஆளில்லா வழிதனிலே
அச்சத்தில் தவிக்கையிலே
மனமொடிந்து போகையிலே
கண்களிரண்டும் கலங்கியிருக்க
கால்களிரண்டும் செயலிழக்க
இதயமோ படபடக்க
செவியிரண்டில் சப்தங்கள் கேட்க
சப்த நாடிகளும் ஒடுங்கி நிற்கையிலே
செய்வதறியா நேரத்திலே
தந்தையைப் போல் கரம் கொடுக்க
மெல்லென மேலே எழுந்து வந்தான்
வெள்ளை நிற நிலவழகன்
தி.பத்மாசினி