நடைமேடையே வீடாய்
வறுமையையே
நாடாய்
கந்தலே ஆடையாய் வாழ்கின்ற வாழ்க்கையிலே
அடுத்தவேளைச்
சோற்றுக்கு
பிறரிடம் கையேந்தும் நிலையிலும்
நாளைக்கென எதுவுமே கையிருப்பில் இல்லாத போதும்
மனமிரங்கி ஒருவர்
உதவி செய்யும்வேளை
நன்றிசொல்லும் விதமாக
ஏழை சிரிப்பானே
அந்த சிரிப்புக்கு
விலையேது?
காதலரின் விழிபேசும் மொழியாய் ஏழையின் இந்த சிரிப்பும் மொழிபேசும்!
நன்றியைச் சொல்லாமல் சொல்லும் அந்த சிரிப்பென்ற மொழிக்கு அதிபதி இறைவனே!
ஏழையைச் சிரிக்கவைப்போம்!
இறைவனை நெருங்கி நிற்போம்!
த.ஹேமாவதி
கோளூர்