Header Ads Widget

Responsive Advertisement

நினைவலை

என்னதான் புதுவருடம்  வந்தாலும் பின்னோக்குகிறது மனது! நடந்தவை நல்லவை
திருவிழாவில் காணாது போன
பிள்ளையின் நினைவலையாய்
கடினமாகிறது-எண்ணங்கள்
    தேதி கிழிக்கப்படுகிறது
     தினங்களும் கழிகிறது
     விடாப்பிடியாய் வயதுக்கு
     விதிவிலக்கில்லை!
சர்க்கரை உப்பும் நிறத்தில்
இரட்டையர்கள் குணத்தில்?
மனிதர்கள் எத்தனையோ
அதுபோல சந்தித்தது!
       சிறு எறும்பு கூட பாடம் கற்று
        தந்திருக்கிறது இவ்வருடம்
        முகம் தெரியா நட்புகள்
         வரிசை தொடர்வண்டியாய்!
இவ்வருட நினைவலைகள்
சிலந்தி வலையாய் எனக்குள்!...

விஜி கல்யாணி