உன்னை சரணடைந்தோம்
இறைவா!,
உன்னை சரணடைந்தோம்.
உயிர் காக்க நாம் உண்ட உணவுகள் எல்லாம்
உயிர் கொல்லி உணவென்று பலர் இங்கு சொல்ல
உண்ணவா? தள்ளவா? தெரியாமல் இன்று நாம்
உன்னை சரணடைந்தோம் இறைவா!,
உன்னை சரணடைந்தோம்.
நல்லதே செய்வார் என்று நம்பிய பலரும்
அல்லதே செய்வதில் குறியாய் இருக்கையில்
நம்பவா? வெம்பவா? தெரியாமல் நாங்களும்
உன்னை சரணடைந்தோம் இறைவா!,
உன்னை சரணடைந்தோம்.
பாசத்தை வேண்டி பலர் பசியோடு இருக்கையில்
வேஷத்தைக் காட்டுவோர் வெகுளியாய் முன் நிற்க
பாசமா? வேஷமா? பகுத்தறிய முடியாமல்
உன்னை சரணடைந்தோம் இறைவா!,
உன்னை சரணடைந்தோம்.
எம்மைக் காத்தருள்வாய் இறைவா!,
உன்னை சரணடைந்தோம்.
*சுலீ அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*