Header Ads Widget

Responsive Advertisement

தமிழ்மொழியும் அவள்விழியும்



அவள் பேசும்போதெல்லாம்
தமிழுக்கு அவளை
அளவில்லாமல் பிடிக்கும்!
காரணம் அவள்
செந்நாவைத் தொட்டு சொற்களாக வெளியேறும்போது
தமிழானது தித்திக்கும் தேனில் மூழ்கி வெளியேறும்!
ஆனால் அவள்
காதலனைப் பார்க்கையில்
கண்ணாலே பேசும்போதெல்லாம்
அவள் வாயின் செந்நாவைத் தொடமுடியாமல்
தேனுக்குள் மூழ்க முடியாமல் போகிறதே என்று
ஏங்கித் தவிக்கும்!

த.ஹேமாவதி
கோளூர்