உள் மனதின் ஓசை.
உள் மனதின் ஓசைகள்
ஒன்றா இரண்டா
எண்ணிச் சொன்னால் எண்ணிலடங்கா
எடுத்துச் சொன்னால் சொல்லிலடங்கா
அப்பாவின் நேர்மையும் ஒழுக்கமும்
உள்மனதில் ஒளித்துக் கொண்டே இருக்கும்
அம்மாவின் அன்பு அசைப்
போட்டு கொண்டே இருக்கும்
புகை பிடிப்போரைக் கண்டால்
ஓங்கி அறையச்சொல்லும்
வறியோரை துன்புறுத்துவோரைக் கண்டால்
வாட்டி வதைக்கத் தோன்றும்
முதியோரைக் கண்டால் முந்தி
உதவி செய்யச் சொல்லும்
யார் தானம் கேட்டாலும்
தயங்காமல்
செய்யச் சொல்லும்
நோயில் வாடுவோரைக் கண்டு
ஆறுதல் அளிக்கச் சொல்லும்
எங்கேனும் தமிழ் தவறாக
இருந்தால் திருத்தச் சொல்லும்
அறிமுகம் இல்லாதவராய் இருந்தாலும்
அன்போடு பேசச் சொல்லும்
உள்ளுக்குள் இருக்கும் பயத்தை
விரட்டி அடிக்கச் சொல்லும்
(ஆனாலும் முடியவில்லை )
இன்னும் எவ்வளவோ இருக்கிறது
தி.பத்மாசினி