நண்பன் தானே என்று மற்றவர் முன் சீண்டிவிடுவது!
அம்மாதானே பிறகு வந்து வாழ்த்தலாம் என்று கிளம்புவது!
அப்பாவிடம் கொடுக்காமல்
சம்பளத்தை சாமிமாடத்தில் வைப்பது!
உன்னிறத்திற்கு இந்த உடை எதற்கு என்று தங்கையை நோகடிப்பது!
இன்னும் சாம்பாருக்கு உப்பு போட தெரியாது என்மனைவிக்கு என்பது!
ஓட்டல் சர்வரிடம் விரல் சுண்டி அழைத்து உணவை கேட்பது!
தர்மம் கேட்பவரிடம் கையில் தராமல் தட்டில் தூக்கி போட்டு நடப்பது!
பத்துரூபாய்க்கு தந்தா தா என்று வெயிலில் விற்கும் வியாபாரியிடம் பேரம் பேசுவது...
இன்னும் ஏராளம் உண்டு விளையாட்டாய் சில தவறுகள்!
அவைகள் எவை என்று உணர்ந்து நீங்களே சரிசெய்யுங்கள்!