கதிரவன் சிறகை விரிக்க
விடியலும் வந்தது
பொழுதும் விடிந்தது
ஊருக்கெல்லாம் விடியல் உண்டு
சிலரது வாழ்க்கையில் விடியலும் இல்லை விடிவும் இல்லை
விடிவே இல்லை விடிவே இல்லை
என்று சும்மா உட்கார்ந்திருந்தால்
விடியல் எப்படி ஏற்படும்?
உன் வாழ்வில் விடியல் ஏற்பட இருபத்திநான்கு மணி நேரம் போதும்
உன் உழைப்பென்னும் ஆயுதத்தில்
முயற்சியென்னும் கைப்பிடி செருகி
புத்தியென்னும் கூர்மையால் தீட்டி
உன் வாழ்க்கையென்னும் நிலத்தில்
உபயோகித்தால் உன் வாழ்வு செழிப்பாகும்
உன் வாழ்வு விடிவது மட்டுமின்றி
உன்னால் பிறரது வாழ்வும் விடியும்
உனக்கு மனதில் துணிவிருந்தால்
நீ ஆகாயத்தை சுருட்டலாம்
நிலத்தையும் மடிக்கலாம்
ஆனால் யாருக்கும் நீ மடிந்து போகாதே
உன் மடியில் இருக்கும்
மடியை மடித்துப் போடு
உம்மை மெல்ல விழுங்கும் பயமென்னும்
பாம்பை அடித்து நொறுக்கு
வீரத்தை கவசமாய் தரித்துக் கொள்
இதனால் உனக்கு வரும் பிரச்சினைக்கே
பிரச்சினை ஏற்பட்டு உன்னை விட்டு ஓடிவிடும்
நீ அதன்மேல் சிம்மாசனமிட்டு சம்மணம் போட்டு அமர்ந்து
உலகை வெல்லலாம்
தி.பத்மாசினி