அகத்திணையில் களித்து
புறத்திணையாய்க்
குழவிதனைப்
பெற்றெடுக்கும்
முன்னரே
பெண்ணென்று
அறிந்து
இதுஎதற்கெனத்
துணிந்து
அரக்கத்தனம்
கொண்டு
அங்கொன்றும்
மேலும்
இங்கொன்றுமாக
இப்பவும்
நடக்கின்றதே
பெண்சிசுக்கொலை!
முறையற்றக்
கலவியிலே
உருவான சிசுக்களுக்கும்
கருவறையிலேயே
கண்ணும்காதுமாய்
இரகசியமாய்
நடக்கிறதே சிசுக்கொலை!
பெண்சிசு எனத்தெரிந்தால்
கருவறையையே
கல்லறையாய்
மாற்றுகின்ற
பெற்றோரும்
துணைபோகும் மருத்துவரும்
இருக்கும்வரை
நின்றுவிடச் சாத்தியமா சிசுக்கொலை!
ஒருவனுக்கு ஒருத்தி என்ற
பைந்தமிழர்ப் பண்பாட்டைச் சிதைக்கின்ற கள்ளக்காதலிலே
பெற்றவளே செய்கின்ற ஈவிரக்கமில்லாத
சிசுக்கொலைகள்!
மனிதத்தோல் போர்த்தியுள்ள
காமவெறி மிருகங்கள் சிசுவென்றும் பாராமல் வன்புணர்வு கொண்டு சின்னாபின்னப் படுத்திச் செய்கின்ற சிசுக்கொலைகள்!
கைவிட்ட கணவன்!
காலமான கணவன்!
சந்தேகக் கணவன்!
குடிகாரக் கணவன்!
பொருளீட்டாகணவன்
இப்படி காரணங்கள்
பலவைத்து
தான் பெற்ற
சிசுக்களை தாயே
கொலைசெய்து
தானும் மாய்வதென
இவ்விதமாயும் நடக்கும் பல
சிசுக்கொலைகள்!
வாழப் பிறந்த
சிசுக்களுக்கு
கொலைசெய்யும்
மாபாதகரை எதிர்க்கத் துணிவிருக்குமா?
உறுப்புகளைப் பெற்று விலைபேசவும் நடக்கிறது கடத்தப்பட்ட சிசுக்களுக்கு கொடூரமான கொலை!
இறைவா!சிசுக்கொலைகள்
நடக்க வேடிக்கைப் பார்ப்பதென்ன?
தினசரி நாளேடுகளில்
இச்செய்திகள்
வருவதென்ன?
சிசுக்களை வாழவிடு!
சிசுக்கொலை செய்பவரை மாய்த்துவிடு!
*த.ஹேமாவதி*
*கோளூர்*