பார்த்ததென்னவோ கண்கள் ஆனால்
கலந்ததென்னவோ
இதயங்கள்
என்றுன்னைக்
கண்டேனோ அன்றுமுதல் எனக்கு பித்து பிடித்ததென்று என்வீட்டில் சொல்கிறார்கள்!
பித்து பிடிக்கவில்லை நான் சித்து கற்றுக்கொண்டேன்!
ஆமாம்.கூடுவிட்டுகூடு பாயும் சித்துக்கலையினிலே
உன்விழிகளின் மோதலினால் நான் முற்றும் தேறிவிட்டேன்!இதழ்தீண்டும் முத்தத்தை விடவும்
உயிர்தீண்டும் முத்தத்தில் சிகரமேறி விட்டேன்!
வாழ்வென்ற கட்டத்தை உன்துணையால்
வட்டமாக்கிக் கொண்டேன்!அவ்வட்டத்தின் மையமாய் உனையிருத்தி கனவிலும் நனவிலும் உன்னையே சுற்றிசுற்றி செக்குமாடாய் உழலுகின்றேன்!
உன்விழி தந்த பாடத்தில் இவ்வாறு நானானாதைப் போல
என்விழிதந்த பாடத்தால் நீயும் இவ்வாறே ஆகியிருப்பாயோ?
என்பதை நானுணர
வழியுரைப்பாய்!
உரைத்தல் நன்றன்று!மீண்டும்
ஒருமுறை என்னைப் பார்த்துவிடு!உன் காதலை உணர்த்திவிட நிரூபணம் தந்துவிடு!
மையலானோமா நாமிருவரும் என்ற வினாவுக்கு ஆம்
என்ற பதிலை உணர்த்திவிடு!
த.ஹே
கோளூர்