இருசக்கர வாகனத்தில்
இடையினிலே புகுந்து செல்லும்
இளசுகளின் வேகம் இழுக்கிறது ஒருபக்கம்.
கிடைக்கின்ற இடைவெளியில்
ஆட்டோவை நுழைத்துவிட்டு
இயக்கவே தவிக்கின்ற
ஓட்டுனர்கள் மறுபக்கம்.
சொந்தமான வண்டிகளில்
சொந்தங்களை அமரவைத்து
சந்தோஷமாகச் செல்கின்ற
நண்பர்கள் அதன் பக்கம்.
நான்கு மாதம் முன்னாலே
முன்பதிவு செய்துவிட்டு
இரயிலில் இடம் கிடைத்ததனால்
மகிழும் மக்கள் எதிர் பக்கம்.
ஏதோ ஒரு பேரூந்தில் இடம் கிடைத்த மகிழ்ச்சியிலே
அசௌகரியங்கள் அனைத்தையுமே தூரமாகமாக ஒதுக்கிவிட்டு
ஆவலுடன் செல்கின்ற
பயணிகள் ஒரு பக்கம்.
சொகுசுப் பேரூந்தில் கேட்டபணம் கொடுத்துவிட்டு
சொகுசாகச் செல்கின்ற
பயணிகள் மறுபக்கம்.
பயணங்கள் பலவிதமாய்
என்றாலும் அனைவருக்கும்
எண்ணங்கள் ஒருவிதமாய்
நினைக்கையிலே மனமகிழ்ச்சி.
சொந்தங்களோடு சேரவேண்டும்,
திருவிழா கூடவேண்டும்,
இது என்றும் நிலைக்கவேண்டும்,
பாரம்பரியம் காக்கவேண்டும்.
வேறென்ன எமக்கு வேண்டும்?
அது தானே தழைக்க வேண்டும்?
*சுலீ அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி*