Header Ads Widget

Responsive Advertisement

காலம்


இறைவனிடம் காலம் படைப்பாகிறது

ஆசிரியர்க்கு காலம் பொறுப்பாகிறது

மாணாக்கர்க்கு காலம் பொழுதுபோக்காகிறது


மருத்துவர்க்கு காலம்உயிராகிறது

தேர்வறையில் காலம் வாழ்வாகிறது

பிரசவத்தில் காலம் மறுபிறப்பாகிறது


முதலாளிகளுக்கு காலம் பொன்னாகிறது

வேலையுள்ளோர்க்கு காலம் பணமாகிறது

வேலையற்றோர்க்கு காலம் வீணாகிறது



விவசாயிகளிடம் காலம் பயிராகிறது

மருந்துகளுக்கு காலம் காலாவதியாகிறது

சோம்பலுற்றோருக்கு காலம் விரயமாகிறது



எழுத்தாளனுக்கு காலம் காவியமாகிறது

கவிஞனுக்கு காலம் கவிதையாகிறது

கலைஞனுக்கு காலம் இசையாகிறது



பிரிவுகளில் காலம் கசக்கிறது

அன்பில் காலம் இனிக்கிறது

துன்பத்தில் காலம் நிலையாயிருக்கிறது


யாவரின் காலமும் காலனிடம்

சிலரின் காலம் கந்துவட்டியிடம்

பெரும்பாலோரின் காலம் தொலைக்காட்சியிடம்



காலம் காலம்காலமாய் மாறாமலிருக்கிறது

நாம் தான் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டு வருகிறோம்


காலம்  பொன் போன்றது

இந்த பொன்னை நாம் மட்டுமே பயன் படுத்த முடியும்



தி.பத்மாசினி