Header Ads Widget

Responsive Advertisement

பேச்சு

அன்பைப் பொழியும் சிலர் பேச்சு,

வம்பை வளர்க்கும் சிலர் பேச்சு.


அறிவைக் கொடுக்கும் சிலர் பேச்சு,

வெறியைத் தூண்டும் சிலர் பேச்சு.


கனிவாய்த் தெரியும் சிலர் பேச்சு,

பனியாய் உருக்கும் சிலர் பேச்சு.


உணர்வை ஊட்டும் சிலர் பேச்சு,

தளர்வை நீக்கும் சிலர் பேச்சு.


இயல்பாய் இருக்கும் சிலர் பேச்சு,

செயலாய் மாறும் சிலர் பேச்சு.


இருளை அகற்றும் சிலர் பேச்சு,

அருளாய்த் தெரியும் சிலர் பேச்சு.


பேச்சாய் இருக்கும் சிலர் பேச்சு,

உயிர் மூச்சாய் மாறும் சிலர் பேச்சு.


பேச்சால் வளர்ந்தவர் பல பேர்கள்,

பேச்சால் அழிந்தவர் பல பேர்கள்.


இடம், பொருள், தேவை அறிந்து பேசி,

பேசும் சொல்லைப் புரிந்து பேசி,

உயர்ந்து நிற்போம் வாழ்வினிலே,

உதாரணமாவோம் வாழ்வினிலே.


*சுலீ அனில் குமார்*

*கே எல் கே கும்முடிப்பூண்டி*