Header Ads Widget

Responsive Advertisement

பாரதி


******


கவிதை யினால் நாட்டில்... 

புரட்சி விதை விதைத்தவன்.


மெட்டெ டுத்துப் பாடியே ...

சுட்டெ ரித்த சூரியன்.


மக்க ளென்னும் தேரையே...

புரட்சி குதிரை பூட்டியே...

 

கட்டி இழுத்த சாரதி... 

எட்டைய புரம் பாரதி.


-ச.சந்திரசூட்

-------------------------------------


11.12.2018

மகாகவி 

சி.சுப்பிரமணியபாரதியார் பிறந்த நாள்.


 தேதி சரியாக நினைவில் இல்லை.ஆனால் இந்தப் பாடல் எழுதி சுமார் பத்து ஆண்டுகள் இருக்கும். பாரதிக்காக நான் ஜோடித்த இந்த "வார்த்தைத் தோரணம்..."

  எழுதியபோது ,  மற்ற சிறுவர் பாடல்களை எழுதியது போன்று சாதாரணமாகவே இருந்தது.


 ஆனால்... குழந்தைகள் இப்பாடலைப் பாடுகிறபோது  உள்ளார்ந்த பூரிப்பை... மகிழ்ச்சியை... அவர்களுக்குள்

ஏற்படுத்தியதை   நேரடியாக பார்க்க முடிந்தது.


காரணம்...

கடைசி இரண்டு வரிகளில் உள்ள ( கட்டி இழுத்த *சாரதி* எட்டய புரம் *பாரதி*) வார்த்தைக் கோர்வைதான். 


 குழந்தைகள்..., (மற்ற பாடல்களை ஒரு முறை பாடினாலும்...) கடைசி இரண்டு வரிகளுக்காகவே நிறைய நேரங்களில் இப்பாடலை இரண்டு முறை உற்சாகமாகப் பாடுகிறார்கள். 

 (தொடுதிரையை கிடைமட்டமாக வைத்துப் படிக்க வேண்டும்)


-ச.சந்திரசூட்

09.12.2018