காற்று செய்த உதவி. கடற்கரை மணலில் அவள் நடந்தபோது அவள்காலடிப்பட்ட மணற்துகள்கள் ரோஜாப்பூக்கள் தங்களை வருடிச் சென்றதாகக் கூறி கர்வமாய் மகிழ்ந்தன! அவள் காலடித்தடம் படாத மணற்துகள்களோ ஏக்கமாய் அவள் செல்வதையே பார்த்தாலும் திரும்பி வரும்போதாவது ரோஜாப்பூ பாதத்தால் தங்களைத் தொட்டுச் செல்வாள் எனக் காத்திருந்தன! பாவம் திரும்புகையில் அவள்பாதை மாறியதால் மீண்டும் ஏமாற்றம்!ஆனால் அப்போது வீசிய காற்றால் முன்னர் அவள்பாதம் பட்ட தடத்திலிருந்த மணற்துகள்களில் சிலதுகள்கள் பறந்து ஏக்கமாயிருந்த மணற்துகள்கள் மேல்வீழ்ந்தன! வீழ்ந்த அக்கணமே அத்துகள்கள் அம்மாடி! இதுவே இத்துணை மென்மையென்றால் நேரடியாய் அவள்பாதம் பட்டிருந்தால் எத்துணை மென்மையாய் இருந்திருக்கும்!இம்மட்டிலாவது சுகம்காண வைத்த காற்றுக்கு கோடானுகோடி நன்றிகள் எனச்சொல்லி மகிழ்ந்தன!
த.ஹேமாவதி.
கோளூர்