*உ* யர்வு வேண்டும் என்ற உணர்வு வேண்டும், அந்த உணர்வோடு நீயும் கற்கவேண்டும், கற்றால் உலகம் உனதென்பதை உணரவேண்டும்.
*ஊ* ராருக்காக நீ உழைக்கவேண்டும், ஊரார் உன்பின்னே நிற்கவேண்டும், நின்று
எம்பிள்ளை இவனென்று போற்றவேண்டும்.
*எ* ண்ணத்தில் நல்ல தெளிவுவேண்டும், அந்தத் தெளிவுனை நாளும் உயர்த்தவேண்டும், உயர்ந்து
நீ சிகரத்தை எட்டவேண்டும்.
*ஏ* ழையைக் கண்டால் இரங்கவேண்டும், ஏரோட்டும் உழவனை மதிக்கவேண்டும்,
அவனை ஏய்ப்பவனை நீயும் துரத்தவேண்டும்.
*சுலீ அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*