பூர்வ ஜென்மத்தின் பலனாய் சுமைகள் இங்கே,,,,
பிறந்ததும் சுமையே,
வளர்ந்ததும் சுமையே,
தொடர்ந்த பருவங்கள் சுமையே,
உடல்
உருவங்கள் சுமையே,
அதன்
அவயங்கள் சுமையே,
கற்பும்
சுமையே,
காக்கும்
கடமையும்
சுமையே,
கண்டதும்
சுமையே,
வந்ததும்
சுமையே,
வழக்கும்
சுமையே,
பேறுகாலம் பெருஞ்
சுமையே,
பெற்றதும் சுமையே,
வளர்ந்து வர,
வந்தது
அனுபவச்
சுமையே,
நரை திரை
வர,
நடந்த
இரண்டு கால்
பெற்ற
ஊன்றுகோல்
சுமையே,
சுகமான
சுமைகள்
சுமந்ததை
மறந்தால்
எல்லாம்
பூஜ்ஜியச்
சுமையே,
ஆங்கோர்
ராஜ்ஜியம்
காண
சென்றிடும் வேளை
சுமப்பவர்
அறிவார்
திரு சுமையே,
சுமைகளில்
எல்லாம் தலைச்சுமை என்பார்
பூஜ்ஜியம்
கண்ட
திரு
சுமையை,
தன் சுமை
மறந்து
பிறர் சுமை
தாங்க
சுமைகள்
என்றும்
சுகமான
"சுமைகள்"
பாலா