தட்டெடுத்து வைத்தாள்!
பானையைச் சுத்தமாய் வழித்து அதிலிருந்த சோற்றினை ஓருபருக்கை விடாமல் தட்டில்
போட்டாள்!
குழம்பும்
ஊற்றினாள்!
பிசைந்தாள்! கொஞ்சநேரத்தில் தட்டு
காலியாயிற்று!
பசிதீர்ந்தது!
தன்வயிற்றைத் தொட்டுப் பார்த்தாள்!
ஒட்டிப்போயிருந்தது!
காரணம் சாப்பிட்டது அவளல்ல!அவள்மகன்!
மகன் உண்டதைப் பார்த்தே மகிழ்ந்து தன்பசியாறினாள் அன்னை!
த.ஹேமாவதி
கோளூர்